Thursday, March 15, 2018

அகத்தியர் விந்து கட்டு மந்திரம்

அகத்தியர் பாடல் கூறும் அந்தரங்க ரகசிய மந்திரம்



புணர்ச்சிக்கென்றும், சுயஇச்சை தீரவும், துணையுடன் நீண்ட நேர இன்பத்தில் ஈடுபட பலரும் இக்கால சூழ்நிலையில் பல மருந்து வகைகளை பயன்படுத்துகின்றனர். இதனால், பல பக்க விளைவுகளும் கேடும் ஏற்படுகின்ற போதிலும் மோக போதையின் காரணமாக இரசாயண மருந்து வகைகளை உட்கொண்டு உபாதை பல பெருகின்றனர்.
மருந்தின்றி, மூலிகையிம் இன்றி எதனையும் உட்கொள்ளாமலே விந்து வீணாக்காமல் இருக்கவும், அதிக நேரம் துணையுடன் போகித்திருக்கவும் நம் மூதாதையர் பின்பற்றி பலன் அடைந்த அகத்தியர் வழி.

நாம் இன்றைய காலங்களிலும் பரம்பரை வைத்தியம் செய்வோர் பலரும் மருந்தின் பெயர் சொன்னால் மருத்தும் பலிக்காது என்பர், காரணம் பல இருந்தாலும் சிலர் அதை தவராக பயன்படுத்திவிட கூடாதே என்பதற்காகவும் தான் என்றால் மிகையாகாது.

அதேபோல் அகத்தியர் முனிவர் கலவியல் தம்பனத்தில் மிக தெளிவாக தனது படாலில் கூறிவுள்ளார். அப்பாடல் பின்வருமாறு.


கலவியல் தம்பனம்

 

"காமப்பா கலவியிலே தம்பனத்தைக் கேளு
கட்டாக நிஷ்டைமுறை கருத்தில் வையே
வையப்பா வாசிதனை மூலத்தூட்டி
மகத்தான மூலமதால் ரேசகத்தை பற்றி
செய்யப்பா பூரகத்தில் கும்பகத்தில் நின்று
செபித்திடுவாய் வசியசிவ வென்று மாறி
பய்யப்பா பாவையர்மேல் ஆசைகொண்டால்
பதறாது விந்துவது செயமாய் நிற்கும்
மெய்யப்பா இம்மொழியை உலகத்தோர்க்கு
விள்ளாதே குற்றம்வரும் செயமாய் நில்லே"


கலவியல் தம்பனதின் விளக்கம்

 

மனதை ஓர் நிலைபடுத்தி நெற்றியில் நம் புருவங்களின் மத்தியில் குவித்துவாறு முச்சை நன்கு உள் இழுத்து அடக்கிக் கொண்டு வசியசிவ என்னும் சிவநாமத்தை மாற்றி செபித்தல் வேண்டும்.
 
அதாவது "ஓம் சிவயவசி" என்று 100 முறை மனதினுள் செபித்து விட்டு பின்பு பெண்களுடன் உறவுகொண்டால் விந்து வெளியேறாமல் தம்பித்து நிற்க்கும். இந்த உண்மையை, உலக மக்களுக்கு சொல்லாதே ஏனென்றால் இதனை தவறான வழிக்கு பயன்படுத்தி விடுவார்கள். மேலும் பல குற்றங்கள் இதனால் நடக்கும் என்று அகத்தியர் தனது பாடலில் கூறியுள்ளார்.

சான்று :- அகத்தியர் கலைஞானம் 1200

No comments:

Post a Comment

மாமிசம் மனித உணவா?

மாமிசம் மனித உணவா? இயற்கை கோட்பாடுகளின் படி மனிதன் சைவமா?அசைவமா? இயற்கையில் இரண்டு விதமான அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 1. சைவம் சா...