Friday, March 16, 2018

ஆ‌ழ்‌ந்த உற‌க்க‌ம் வர..



தூக்கம் வராமல் தவிப்பவ‌ர்க‌ள் ஏராளமானோ‌ர் உ‌ண்டு. அத‌ற்கு பல காரணங்களு உண்டு. ஆ‌ழ்‌ந்த தூக்கம் வர ‌சில எ‌ளிய நடைமுறைகளை‌க் கையாள வே‌ண்டு‌ம்.

எ‌ப்போதுமே தூ‌‌க்க‌ம் வராமல் படுக்கையில் புரளக்கூடாது. வெளியில் வந்து, புத்தகம் படிக்கலாம்.

 தானாக தூக்கம் வந்துவிடும். பத்து நிமிடம் மூச்சுபயிற்சி செய்யலாம். இ‌ப்படி செ‌ய்தா‌ல் பலரு‌க்கு எ‌ளிதாக தூ‌க்க‌ம் வ‌ந்து ‌விடு‌ம்.

மேலு‌ம், எ‌ப்போது‌ம் ‌வீ‌ட்டி‌ற்கு‌ள் முட‌ங்‌கி இரு‌ப்பவ‌ர்களு‌க்கு வை‌ட்ட‌மி‌ன் டி ப‌ற்றா‌க்குறை ஏ‌ற்படு‌கிறது. இது தா‌ன் தூ‌க்க‌ம் தடைபடுவத‌ற்கு‌ மு‌க்‌கிய‌க் காரண‌ம்.

 எனவே, காலை‌யிலு‌ம், மாலை‌யிலு‌ம் சூ‌ரிய வெ‌ளி‌ச்ச‌ம் படு‌ம் வகை‌யி‌ல் இரு‌ப்பது ந‌ல்லது.

சில‌ர் .தூ‌‌க்க‌ம் வரா‌ம‌ல் போனா‌ல் டி‌வி பா‌ர்‌ப்பா‌ர்க‌ள் இது ‌மிகவு‌ம் தவறு. வரு‌ம் கொ‌ஞ்ச ந‌ஞ்ச தூ‌க்க‌த்தையு‌ம் டி‌வி கெடு‌த்து ‌விடு‌ம்.

சி‌றிய நடை‌ப்ப‌யி‌ற்‌சி செ‌ய்து ‌வி‌ட்டு வ‌ந்து படு‌த்தாலு‌ம் எ‌ளிதாக தூ‌க்க‌ம் வரு‌ம். படு‌க்கை அறை கா‌ற்றோ‌ட்டமாகவு‌ம், அ‌திக வெ‌ளி‌ச்ச‌ம் இ‌ல்லாம‌ல் இரு‌க்குமாறு‌ம் பா‌ர்‌த்து‌க் கொ‌ள்ள வே‌ண்டு‌ம்.

இந்து மதத்தில் பசுவுக்கும், பாம்புக்கும் அதிக முக்கியத்துவம் கொடுப்பது ஏன்?

இந்து மதத்தில் பாம்புக்கும், பசுவுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுப்பது வழக்கம். இதற்கான காரணம் என்னவென்று அறிவோம்.

இந்து மதத்தில் பாம்புக்கும் பசுவுக்கும் தனி இடம் எப்போதும் உண்டு. மற்ற விலங்குகள், பிராணிகளைவிட இந்த இரண்டுக்கும் அதிக முக்கியத்துவம், பசுவைத் தெய்வமாக மதிக்கும் மதம் நமது இந்து மதம்.

பசு:-
இத்தனை மிருகங்களுக்கும் இல்லாத மரியாதை பசுவுக்கு மட்டும் ஏன்? பசு தன் கன்றுக்கு மட்டுமில்லாமல், அனைவருக்குமே தன் பாலைத் தருவதால் மட்டுமல்ல. பசு எதைச் சாப்பிடுகிறது? மனிதன், நெல்லிலிருந்து பெறும் அரிசியைச் சமைத்துச் சாப்பிடுகிறான், நெல்லின் உமியைத் தவிடாகவும், நெற்கதிரின் வற்றிய நாற்றான வைக்கோலையும் பசு உணவாகக் கொள்கிறது. எண்ணெயை நாம் உட்கொள்ள, மிச்சமிருக்கும் புண்ணாக்கை உட்கொள்கிறது பசு. ஆக, மனிதன் சாப்பிட்ட உணவின் இயற்கை மிச்சங்களைச் சாப்பிட்டு விட்டு, மனிதர்களைத் தன் குழந்தைகளாகவே கருதி பாலைக் கொடுக்கிறது. இப்படித் தன்னலம் கருதாமல் மனித வர்க்கத்துக்கு பாலைக் கொடுப்பதுடன், பசுவின் சாணம் வரட்டியாகவும் இன்றைய காலகட்டத்தில் கோபர் கேஸாகவும் அதாவது - எரிபொருளாக உதவுகிறது.

பசுவின் சாணத்துக்கு நோய்த்தொற்று தடுப்பான் குணம் இருப்பதாலேயே, வீட்டுத் தரைகளில் பசுவின் சாணம் வைத்து மெழுகும் பழக்கம் வந்தது. பசுவின் மூத்திரத்தில் அது சாப்பிடும் புல் வகைகளிலிருந்து கிடைக்கும் மருந்துச் சத்து இருப்பதால், பல மருந்துகள் தயாரிப்பில் கோமூத்திரம் இடம்பெறுகிறது. அந்தக் காலத்தில் பஞ்சகவ்யம் என்ற ஆரோக்கிய மருந்துக் கலவை மிகப் பிரபலம். பசுவின் மூத்திரம் கலந்ததுதான் பஞ்சகவ்யம். அள்ளி அள்ளிக் கொடுக்கும் பசுவுக்கும், காமதேனு என்ற தெய்வ உருவமும் கொடுத்தார்கள் நம் முன்னோர்.

சாதுவான பிராணி, மென்மையான பிராணி பசு என்பதால் பரமசிவன் அமரும் வாகனம் பசுவாக இல்லாமல் காளையாக சித்தரிக்கப்பட்டது. இதில்கூட பசுவைக் காயப்படுத்திவிடக் கூடாது என்பதில் நம் முன்னோர் குறிப்பாக இருந்தது புரியும். பசுவை மகாலட்சுமியின் அம்சமாகவே கருதியது, மனிதனின் பொருளாதார முன்னேற்றத்தில் பசுவின் பெரும்பங்கை மனதில் வைத்துதான்.

பாம்பு:-
இதேபோன்று, பாம்பை நாகம் என்ற தெய்வ வடிவாகவே வழிபட்டார்கள் நம் முன்னோர். மகாவிஷ்ணு ஆதிசேஷன் என்ற பாம்பின் மேல் படுத்திருக்கிறார். பரமசிவன் கழுத்தில் பாம்பு அழகாகச் சுற்றிக்கொண்டிருக்கிறது. விநாயகப் பெருமான் இடுப்பில் பாம்பை சுற்றிக் கொண்டிருக்கிறார். பகவான் கிருஷ்ணர் காளிங்கன் என்ற பாம்பின் மேல் நர்த்தனம் ஆடுகிறார். முருகனின் வாகனமான மயில்கூட வாயில் பாம்பைக் கொத்திக் கொண்டிருப்பது போல் அமைப்புண்டு.

அது சரி, நாம் வைக்கும் பாலைக் குடித்துவிட்டு நஞ்சை உமிழும் பாம்புக்குப் புற்றமைத்து பாலையும் ஊற்றி; அதையும் தெய்வாம்சம் கொண்டதாக ஆக்கியதேன்? ஒரு பக்கம் தன்னலம் கருதாது கொடையளிக்கும் பசுவும் தெய்வமாகிறது. மறுபக்கம், அந்தப் பசுவின் பாலைக் குடித்துவிட்டு நஞ்சை உமிழ்ந்து மனிதனுக்கு ஆபத்தை உண்டாக்கக்கூடிய பாம்பையும் தெய்வமாக்கியது ஏன்? இந்த குழப்பத்திற்கு வாரியார் சுவாமிகள், அருமையான விடையைக் கூறியுள்ளார். மனித ஜென்மம் என்பது பாவங்களும், புண்ணியமும் கலந்த ஒன்று. மனிதனுக்கு மனிதன் பாவ-புண்ணிய விகிதாசாரம் வேறுபடலாம். ஆனால், வாழ்க்கை முழுவதும் 100 சதவிகிதம் பாவம் செய்தவனுமில்லை, புண்ணியம் செய்பவனும் இருப்பது சாத்தியமில்லை.

இறைவன் எப்படிப்பட்ட மனிதனையும் தன் பிரஜையாகவே கருதி ரட்சிக்கிறான். அதன் அடையாளமாகத்தான் மனித உணவின் எச்சத்தை உண்டு, சத்தான பாலைக் கொடுக்கும் பசுவையும், தெய்வாம்சம் கொண்டதாகச் செய்தார் கடவுள். அந்தப் பாலைக் குடித்துவிட்டு நஞ்சை உமிழும் பாம்பையும், கழுத்திலோ இடுப்பிலோ தன் உருவத்திலோ அணிந்துகொண்டு நஞ்சையளிக்கும் நாகப் பாம்பையே ஏற்றுக் கொள்கிறேன். உன்னையா ஏற்றுக்கொள்ள மாட்டேன் ? என்று சொல்வது போல்தான் பாம்பையும் தெய்வாம்சம் கொண்டதாக்குகிறார் என்று விளக்கமளித்தார்.

எவ்வளவு உண்மையான வார்த்தைகள்? *நல்லவனுக்கும் சரி, கெட்டவனுக்கும் சரி, ஆத்திகனுக்கும் சரி, நாத்தினுக்கும் சரி. கடவுள் ஒன்றுதான்!

Thursday, March 15, 2018

அகத்தியர் விந்து கட்டு மந்திரம்

அகத்தியர் பாடல் கூறும் அந்தரங்க ரகசிய மந்திரம்



புணர்ச்சிக்கென்றும், சுயஇச்சை தீரவும், துணையுடன் நீண்ட நேர இன்பத்தில் ஈடுபட பலரும் இக்கால சூழ்நிலையில் பல மருந்து வகைகளை பயன்படுத்துகின்றனர். இதனால், பல பக்க விளைவுகளும் கேடும் ஏற்படுகின்ற போதிலும் மோக போதையின் காரணமாக இரசாயண மருந்து வகைகளை உட்கொண்டு உபாதை பல பெருகின்றனர்.
மருந்தின்றி, மூலிகையிம் இன்றி எதனையும் உட்கொள்ளாமலே விந்து வீணாக்காமல் இருக்கவும், அதிக நேரம் துணையுடன் போகித்திருக்கவும் நம் மூதாதையர் பின்பற்றி பலன் அடைந்த அகத்தியர் வழி.

நாம் இன்றைய காலங்களிலும் பரம்பரை வைத்தியம் செய்வோர் பலரும் மருந்தின் பெயர் சொன்னால் மருத்தும் பலிக்காது என்பர், காரணம் பல இருந்தாலும் சிலர் அதை தவராக பயன்படுத்திவிட கூடாதே என்பதற்காகவும் தான் என்றால் மிகையாகாது.

அதேபோல் அகத்தியர் முனிவர் கலவியல் தம்பனத்தில் மிக தெளிவாக தனது படாலில் கூறிவுள்ளார். அப்பாடல் பின்வருமாறு.


கலவியல் தம்பனம்

 

"காமப்பா கலவியிலே தம்பனத்தைக் கேளு
கட்டாக நிஷ்டைமுறை கருத்தில் வையே
வையப்பா வாசிதனை மூலத்தூட்டி
மகத்தான மூலமதால் ரேசகத்தை பற்றி
செய்யப்பா பூரகத்தில் கும்பகத்தில் நின்று
செபித்திடுவாய் வசியசிவ வென்று மாறி
பய்யப்பா பாவையர்மேல் ஆசைகொண்டால்
பதறாது விந்துவது செயமாய் நிற்கும்
மெய்யப்பா இம்மொழியை உலகத்தோர்க்கு
விள்ளாதே குற்றம்வரும் செயமாய் நில்லே"


கலவியல் தம்பனதின் விளக்கம்

 

மனதை ஓர் நிலைபடுத்தி நெற்றியில் நம் புருவங்களின் மத்தியில் குவித்துவாறு முச்சை நன்கு உள் இழுத்து அடக்கிக் கொண்டு வசியசிவ என்னும் சிவநாமத்தை மாற்றி செபித்தல் வேண்டும்.
 
அதாவது "ஓம் சிவயவசி" என்று 100 முறை மனதினுள் செபித்து விட்டு பின்பு பெண்களுடன் உறவுகொண்டால் விந்து வெளியேறாமல் தம்பித்து நிற்க்கும். இந்த உண்மையை, உலக மக்களுக்கு சொல்லாதே ஏனென்றால் இதனை தவறான வழிக்கு பயன்படுத்தி விடுவார்கள். மேலும் பல குற்றங்கள் இதனால் நடக்கும் என்று அகத்தியர் தனது பாடலில் கூறியுள்ளார்.

சான்று :- அகத்தியர் கலைஞானம் 1200

இயற்கையின் விதியும்! - கார்ப்பரேட் சதியும்!

இயற்கையா ? - கார்ப்பரேட்டா ?...

பசித்து உண்ண வேண்டும் என்பது இயற்கையின் விதி!

நேரத்திற்கு  சாப்பிட வேண்டும் என்பது கார்ப்பரேட் சதி!

தாகத்திற்கு  நீர் அருந்த வேண்டும் என்பது இயற்கையின் விதி!

தினம் 7 லிட்டர் நீர் அருந்த வேண்டும் என்பது கார்ப்ரேட் சதி!

தரமான   இயற்கை உணவுகள்  இயற்கையின் விதி!

உணவில் ரசாயன கலப்பு கார்ப்பரேட் சதி!

தாய்ப் பால் மட்டும் தான் மனிதனுக்கு என்பது இயற்கையின் விதி!

மாட்டுப் பாலும் மனுசனுக்கு என்பது கார்ப்பரேட் சதி!

சுகப் பிரசவம்  என்பது இயற்கையின் விதி!

சிசேரியன் என்பதே கார்ப்பரேட் சதி!

யாரும்  இனிப்பும், பழங்களும் சாப்பிடலாம் என்பது இயற்கையின் விதி!

சர்க்கரை நோயாளிகள் இனிப்பும்  பழமும் தொடக் கூடாது என்பது  கார்ப்பரேட் சதி!

யாரும் கொழுப்பு உணவுகள்  சாப்பிடலாம் என்பது இயற்கையின் விதி!

இருதய நோயாளிகள் கொழுப்பு சாப்பிடக் கூடாது  என்பது கார்ப்பரேட் சதி!

பசி வந்தால் எந்த நோயும்   குணமாகும் என்பது இயற்கையின் விதி!

எந்த நோய்க்கும் மருந்து சாப்பிட வேண்டும் என்பது  கார்ப்பரேட்  சதி!

ஆரோக்கிய வாழ்வுக்கு இரவு தூக்கம் என்பது இயற்கையின் விதி!

அதை மறைத்து வைத்தது கார்ப்பரேட் சதி!

நம் ஆரோக்கியத்தை  சொல்லும் உடலின் மொழி இயற்கையின்  விதி!

நோயைக் காட்டும் மருத்துவ பரிசோதனை கார்ப்பரேட் சதி!

எந்த நோயும் முழுதும் குணமாகும் என்பது  இயற்கையின் விதி!

எந்த நோயும் குணமாகாது என்பது  கார்ப்பரேட் சதி!

ஒவ்வொரு  மனிதருக்குள்ளும் ஓராயிரம் மருத்துவர் என்பது இயற்கையின்  விதி.

ஒவ்வொரு உறுப்புக்கும் ஒரு மருத்துவர் என்பது கார்பரேட் சதி.

தண்ணீரை மண் வடி கட்டும் என்பது இயற்கையின் விதி.

தண்ணீரை வடி கட்ட R.O மிஷின் தண்ணீரை குடியுங்கள் என்பது கார்பரேட் சதி.

நாட்டுச் சோளம் சாப்பிடுவது இயற்கையின் விதி.

மரபியல் மாற்ற அமெரிக்க சோளத்தை தின்று மரணிக்க வைப்பது கார்பரேட் சதி.

மருத்துவம் என்பது எளிதானது, இயற்கையானது என்பது விதி!

அதை வணிகமாக்கியது  கார்ப்பரேட் சதி!

மற்றவருக்கு இதனை படித்தும், பகிர்ந்தும்,  இதன்படி நடக்க வேண்டும் என்பது இயற்கையின் விதி !

படித்து மற்றவர்க்கு அனுப்பி மட்டும் விட்டு மீண்டும் கார்ப்பரேட் வாழ்க்கை வாழ வேண்டும் என்பது சதி!


Friday, March 9, 2018

டூத் பேஸ்ட் வாங்க போறதுக்கு முன்னாடி இத படிச்சிட்டு போங்க...


தினமும் நாம் மறக்காமல் செய்யும் ஒரு விஷயம் பல் துலக்குவது. அதிலும் நம்மில் கிட்டதட்ட 69சதவீதம் பேர் காலை, இரவு என ஒரு நாளைக்கு இரண்டு முறை பல் துலக்குகிறோம். நல்ல விலையுயர்ந்த பேஸ்ட் கொண்டு பல் துலக்குவதை கௌரவம் என்று நினைப்பவர்களும் அதற்குள் அடங்கியிருக்கிறார்கள் என்பதை நம்மால் மறுக்கவே முடியாது. ஆனால் நாம் அப்படி டூத் பேஸ்ட் கொண்டு ஒரு நாளைக்கு இரண்டு முறை பல் துலக்குவது என்பது நம்முடைய ஆரோக்கியத்துக்கு நல்லது தானா என்று பார்த்தால் அது முற்றிலும் கேடு விளைவிப்பதாகவே இருக்கிறது. பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும் இரண்டு முறை ஒரு நாளைக்கு இரண்டு முறை பல் துலக்க வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். அது ஆரோக்கியமான விஷயம் தான். ஆனால் நாம் பயன்படுத்தும் டூத் பேஸ்ட் ஆரோக்கியமானதா என்பது தான் கேள்வி. அதனால் எத்தனை முறை பல் துலக்குகிறோம் என்பது முக்கியமே இல்லை. எப்படிப்பட்ட பேஸ்ட் கொண்டு துலக்குகிறோம் என்பது தான் முக்கியம். உயிர்க்கொல்லிகள் நாம் பயன்படுத்தும் டூத் பேஸ்ட்டுகள் தற்போது பல்வேறு பிளேவர்களில் வருகின்றன. அதையும் நமக்குப் பிடித்த பிளேவர்களில் வாங்கிக் கொள்கிறோம். அவை நம்முடைய பற்களைப் பாதுகாக்கும் என்று நம்புகிறோம். ஆனால் அவை நம்முடைய உயிருக்கே கேடு விளைவிக்கக் கூடிய ஒன்றாகவே இருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியுமா?... ஆம். நாம் வாங்கும் பெரும்பாலான டூத் பேஸ்ட்டுகளில் உயிர்க்கொல்லிகள் அதிகமாகக் கலக்கப்படுகின்றன. எந்த டூத் பேஸ்ட் வாங்கக்கூடாது? என்ன டூத் பேஸ்ட் வாங்க வேண்டும் என்பதைவிட எதையெல்லாம் வாங்கக் கூடாது என்பதைத் தெரிந்து கொண்டாலே போதும். பாதி பிரச்னை தீர்ந்துவிடும். டூத் பேஸ்ட்டில் நிறம், மணம், சுவை ஆகியவற்றுக்காக பல்வேறு வேதிப்பொருள்கள் கலக்கப்படுகின்றன. அதனால் என்னென்ன பொருள்கள் கலந்திருந்தால் வாங்கக் கூடாது என்பதைத் தெரிந்துகொண்டு அந்த மாதிரியான டூத் பேஸ்ட்டை வாங்காமல் தவிர்த்திடுங்கள். புளோரைடு பொதுவாக நாம் பயன்படுத்தும் பெரும்பாலான டூத் பேஸ்ட்களில் புளோரைடு கலந்துதான் இருக்கிறது. குறிப்பாக அமெரிக்காவில் விற்கப்படும் 95 சதவீத டூத் பேஸ்ட்டுகளில் புளோரைடு மிக அதிக அளவில் கலந்திருக்கிறது. அது பற்களின் எனாமலை போக்குவதோடு பற்களின் நிறமும் நாளடைவில் மங்கச் செய்துவிடும். 41 சதவீதம் பேர் அமெரிக்காவில் இந்த எனாமல் தேய்மானப் பிரச்னையால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர் என்கிறது ஓர் ஆயு்வு. செயற்கை இனிப்புகள் டூத் பேஸ்ட் எப்போதும் வறட்சியடையாமல் இருக்கக் காரணம்அதில் சேர்க்கப்படும் சோர்பிடோல் என்னும் திரவம் தான். இது குழந்தைகளுக்கு டயேரியாவை உண்டாக்கிவிடும். டூத் பேஸ்ட்டில் சுவைக்காக பயன்படுத்தப்படுகிற சாச்சரின் என்னும் மற்றொரு செயற்கை இனிப்பு வகை சிறுநீர்ப்பையில் புற்றுநோயை உண்டாக்குகிறது. அதற்கு பதிலாக ஸ்டீவியா அல்லது எக்ஸ்லிடோல் என்னும் இயற்கை இனிப்பு வகை அடங்கிய டூத் பேஸ்ட் பயன்படுத்துவது நல்லது. செயற்கை நிறமிகள் டூத் பேஸ்ட்டில் பயன்படுத்தப்படுகிற சிந்தடிக் கலர்கள் பெரும்பாலும் நிலக்கரி தாரிலிருந்து பிரித்தெடுக்கப்படுகின்றன. ஏழு நிறங்கள் மட்டுமே டூத் பேஸ்ட்டில் பயன்படுத்த அங்கீகரிக்கப்பட்டவை. மற்ற நிறங்களுக்கு தடையுண்டு. குறிப்பாக, மஞ்சள் நிற டூத் பேஸ்ட்டுகள் ஒற்றை தலைவலி, ரத்த அழுத்தம், கேன்சர் ஆகியவற்றை உண்டாக்கும் வாய்ப்புகள் மிக அதிகம். அதனால்உங்க டூத் பேஸ்ட் இந்த மாதிரி இருந்தா மொதல்ல அத தூக்கி வீசுங்க... சோடியம் லாரில் சல்பேட் சோடியம் லாரில் சல்பேட் டிடர்ஜெண்ட்டாகப் பயன்படுத்தக் கூடியது. ஆனால் அதை நம்முடைய டூத் பேஸ்ட்டில் உட்பொருளாகப் பயன்படுத்துகிறார்கள். அது உண்மையிலேயே தரையை சுத்தம் செய்வதற்காகப் பயன்படுத்தப்படும் ஒரு பொருள். டூத் பேஸ்ட்டில் நுரை வருவதற்காக இந்த வேதிப்பொருள் சேர்க்கப்படுகிறது. இதனால் நாக்கில் வெள்ளை நிறத்தில் புள்ளிகள் உண்டாகும். கார்ஹீனன் இந்த கார்ஹீன்ன என்னும் வேதிப்பொருள் சிவப்பு கடல்பாசியின் கழிவிலிருந்து பிரித்தெடுக்கப்படுகிறது. இது பொதுவாக டூத் பேஸ்ட் திக்காக மாற்றுவதற்காகப் பயன்படுத்தப்படுகிறது. இந்த உட்பொருள் கொண்ட பேஸ்ட்டை பயன்படுத்துவதால் இரைப்பை அழற்சி, மலக்குடல் புற்றுநோய், அல்சர் ஆகியவை உண்டாகும் என்று விலங்குகள் கொண்டு பரிசோதிக்கப்பட்டு நிரூபிக்கப்பட்டுள்ளது. இது நம்முடைய உடலில் இன்சுலின் சுரப்பை தடுக்கவும் குளுக்கோஸ் பற்றாக்குறையையும் உண்டாக்குகிறது. புரோபலின் க்ளைக்கால் டூத் பேஸ்ட் உறைந்து போகாமல் இருப்பதற்காகப் பயன்படுத்தப்படுகிற மிக முக்கிய உட்பொருள் தான் இந்த புரோபலின் க்ளைக்கால் ஆகும். இது பொதுவாக அழகு சாதனப் பொருள்களில் மென்மைத்தன்மை கொடுப்பதற்காகப் பயன்படுத்தப்படுவது. இந்த புரோபலின் க்ளைக்கால் சேர்க்கப்பட்ட டூத் பேஸ்ட் பயன்படுத்தப்படுவதால் மத்திய நரம்பு மண்டலம், கல்லீரல், இதயம் ஆகியவை பாதிப்புக்கு உள்ளாகும். ட்ரைகுளோசன் பாக்டீரியா தாக்குதலில் இருந்து தப்பிக்க இந்த ட்ரைகுளோசன் டூத் பேஸ்ட்டுகளில் பயன்படுத்தப்படுகிறது. அமெரிக்கா சுகாதார நிறுவனம் இந்த ட்ரைகுளோசன் கலந்த சோப்பு மற்றும் பாடி வாஷ்களுக்கு தடை விதித்துள்ளது. ஆனால் நாம் பயன்படுத்தும் கோல்கேட் டூத் பேஸ்ட்டில் இன்னும் இந்த ட்ரைகுளோசன் பயன்படுத்தப்பட்டுக் கொண்டு தான் இருக்கிறது. இந்த ட்ரைகுளோசன் நம்முடைய உடலில் தைராய்டு ஹார்மோன்களைக் குறைக்கிறது. நோய் எதிர்ப்பு ஆற்றல் அதிகரிக்காமல் தடுக்கிறது. எந்த பேஸ்ட் வங்கலாம்... கடையில் நிறைய காசை கொடுத்து எதையாவது வாங்கி, கூடவே நோயையும் சேர்த்து வாங்குவதை விட, வீட்டிலேயே டூத் பேஸ்ட் தயாரித்து பயன்படுத்துவது நல்லது. கிளே பேஸ்ட் அதாவது மண்ணில் நம் முன்னோர்கள் பல் துலக்கினார். அதை முட்டாள்தளம் என்று சொன்னோம். ஆனால் அதுதான் ஆரோக்கியம் நிறைந்தது என்பதை உணர தவறிவிட்டோம். அதைத்தவிர, வேப்பிலையின் குணம் நிறைந்த, வேப்பிலை எண்ணெய் உட்பொருளாகக் கொண்ட, கிராம்பு உட்பொருளாகக் கொண்ட டூத் பேஸ்ட்டுகளை வாங்கிப் பயன்படுத்துவது நம்முடைய பணத்தை சேமிப்பதற்காக மட்டுமல்ல, நம்முடைய பற்கள் மற்றும் சிறுநீரகம், கல்லீரல் போன்ற உள்ளுறுப்புகளையும் பாதுகாக்க முடியும் என்பதை மறந்துவிடாதீர்கள்.

மாமிசம் மனித உணவா?

மாமிசம் மனித உணவா? இயற்கை கோட்பாடுகளின் படி மனிதன் சைவமா?அசைவமா? இயற்கையில் இரண்டு விதமான அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 1. சைவம் சா...