தூக்கம் வராமல் தவிப்பவர்கள் ஏராளமானோர் உண்டு. அதற்கு பல காரணங்களு உண்டு. ஆழ்ந்த தூக்கம் வர சில எளிய நடைமுறைகளைக் கையாள வேண்டும்.
எப்போதுமே தூக்கம் வராமல் படுக்கையில் புரளக்கூடாது. வெளியில் வந்து, புத்தகம் படிக்கலாம்.
தானாக தூக்கம் வந்துவிடும். பத்து நிமிடம் மூச்சுபயிற்சி செய்யலாம். இப்படி செய்தால் பலருக்கு எளிதாக தூக்கம் வந்து விடும்.
மேலும், எப்போதும் வீட்டிற்குள் முடங்கி இருப்பவர்களுக்கு வைட்டமின் டி பற்றாக்குறை ஏற்படுகிறது. இது தான் தூக்கம் தடைபடுவதற்கு முக்கியக் காரணம்.
எனவே, காலையிலும், மாலையிலும் சூரிய வெளிச்சம் படும் வகையில் இருப்பது நல்லது.
சிலர் .தூக்கம் வராமல் போனால் டிவி பார்ப்பார்கள் இது மிகவும் தவறு. வரும் கொஞ்ச நஞ்ச தூக்கத்தையும் டிவி கெடுத்து விடும்.
சிறிய நடைப்பயிற்சி செய்து விட்டு வந்து படுத்தாலும் எளிதாக தூக்கம் வரும். படுக்கை அறை காற்றோட்டமாகவும், அதிக வெளிச்சம் இல்லாமல் இருக்குமாறும் பார்த்துக் கொள்ள வேண்டும்.
No comments:
Post a Comment