சண்டிகேசுவரர் சைவ சமயத்தின் பஞ்ச மூர்த்திகளில் ஒருவராகவும், சிவபெருமானுக்கு படைக்கப்படும் உணவு மற்றும் உடைகளின் அதிபதியாகவும் இருக்கிறார். இவருடைய சந்நிதி சிவாலயங்களில் சிவபெருமானின் கருவறை அமைந்திருக்கும் பகுதியின் இடப்பாகத்தில் அமைக்கப்படுகிறது. பஞ்ச மூர்த்தி உலாவின் பொழுது சிவாலயங்களிலிருந்து இவருடைய உற்வசர் சிலையும் ஊர்வலமாக எடுத்துவரப்படுகிறது. பஞ்ச மூர்த்தி உலாவில் இறுதியாக இவர் வலம் வருகிறார்.
சண்டிகேசுவரர்கள்:
சிவபெருமான் அளிக்கும் சண்டிகேசுவரர் பதவி யுகத்திற்கு யுகம் வேறு வேறு நபர்களுக்கு அளிக்கப்படுகிறது. சிவாகம புராணங்களில் ஒவ்வொரு யுகத்திற்கும் சண்டிகேசுவரர்கள் உள்ளார்கள் என்பது தெரிவிக்கப்பட்டுள்ளது. சிவாகம புராணங்களின் படி கீழுள்ள பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது.
கிருத யுகம் - நான்கு முக சண்டிகேசுவரர்
திரேதா யுகம் - மூன்று முக சண்டிகேசுவரர்
துவாபர யுகம் - இரண்டு முக சண்டிகேசுவரர்
கலியுகம் - ஒரு முக சண்டிகேசுவரர்
பிரம்மாவிற்கு சண்டிகேசுவர பதவி
படைப்புக் கடவுளான பிரம்ம தேவர் சண்டிகேசுவர பதவியில் இருந்துள்ளார். இவரை சதுர்முக சண்டீசர் என்று அழைப்பர். இவர் நான்கு முகத்தோடு இருக்கிறார்.
யமனுக்கு சண்டிகேசுவரர் பதவி
தர்மத்தின் கடவுளாக உள்ள யம தேவன், சண்டிகேசுவரர் பதவியில் இருந்தவர். தமிழகத்தில் சில சிவாலயங்களில் சண்டிகேசுவரராக யம தேவன் உள்ளார். திருவாஞ்சியம் வாஞ்சிநாதசுவாமி கோயில் திருவாரூர் போன்ற சிவாலயங்களில் யமன் சண்டிகேசுவரராக உள்ளார். இவரை யம சண்டிகேசுவரர் என்று அழைக்கின்றனர்.
நாயன்மாருக்கு சண்டேசுவர பதவி
சோழநாட்டில் சேய்ஞ்ஞலூர் என்ற திருத்தலம் உள்ளது. இங்கு எச்சதத்தன், பவித்திரை தம்பதியினர் வசித்தனர். இவர்களது மகன் விசாரசருமன். இவன் சிறு வயதிலேயே சிவபக்தி கொண்டவனாக வளர்ந்தான்.
சிறுவயதிலேயே சிவபக்தி கொண்ட இவர், ஒரு முறை இடையச் சிறுவன் ஒருவன் தனது பசுக்களை அடிப்பதைக் கண்டு, வெகுண்ட விசாரசருமர் தானே பசுக்களை மேய்க்கத் தொடங்கினார். பசுக்கள் மீது மிகுந்த அன்பு கொண்டதால், பசுக்கள் இவரை தங்கள் உயிராகக் கருதின.
மாடு மேய்க்கச் செல்லும் இடத்தில், மணலைக் குழைத்து சிவலிங்கம் வடிப்பார். மேயச்செல்லும் பசுக்கள், தங்கள் பாலை அதன் மேல் சுரந்து அபிஷேகம் செய்யும். சிவசேவை செய்த பசுக்கள், வீட்டுக்கு வந்த பிறகும், தங்கள் எஜமானர்களுக்கு தேவைக்கதிகமாகவே பாலைக் கொடுத்தன.
ஒருமுறை அவ்வூர் இளைஞன் ஒருவன், சிவலிங்கம் மீது பசுக்கள் பால் சுரந்ததைப் பார்த்து விட்டு, ஊருக்குள் போய், விசாரசருமனின் செய்கை பற்றி சொல்லிக் கொடுத்து விட்டான். எஜமானர்கள், இது குறித்து எச்சதத்தனிடம் சொல்லி, மகனைக் கண்டித்து வைக்கும்படி
கூறினார்கள்.
விசாரசருமர் மண்ணில் லிங்கத்தினைச் செய்து, பசுவின் பாலால் அபிசேகம் செய்தார். அதனை நேரில் கண்ட தந்தைக்கு மண்ணில் பாலை ஊற்றி வீணாக்குகின்றானே என்று நினைத்து பூசையை தடுக்கச் சென்றார். விசாரசருமர் சிவபெருமானிடத்தில் தன்னை மறந்திருந்தமையால், தந்தையின் வருகையை அறியாதிருந்தார். அதனால் விசாரசருமரின் தன்னுடைய கோபத்தால், சிவாபிசேகத்திற்கு வைத்திருந்த பாலினை தட்டிவிட்டார்.
சிவனை நிந்தை செய்த தந்தையை தண்டிக்கும் பொருட்டு அருகிலிருந்து குச்சியை எடுத்து விசாரசருமர் வீச, அது விசாரசருமரின் பக்தியால் மழுவாக மாறி அவர் தந்தையின் கால்களை வெட்டியது. விசாரசருமர் தனது பூசையை தொடர்ந்தார்.
இதனைக் கண்ட சிவபெருமான், அவர் முன் தோன்றி தனக்கு சமர்ப்பிக்கும் அனைத்திற்கும் உரியவனாகும் சண்டேசுவர பதவியை அளித்தார். இப்போதும், சிவனுக்கு அணிவித்த மாலையையே சண்டிகேஸ்வரருக்கு அணிவிக்கும் பழக்கம் இருக்கிறது.
அதன் பின் விசாரசருமர் சண்டேசுவர நாயனார் என்று அழைக்கப்படுகிறார்!
சிவாலயங்களில் ஆலயச்சுற்று வரும்போது கருவறை அபிஷேக நீர் விழும் கோமுகி அருகில் சிறு சந்நிதியில் இருக்கும் சண்டிகேஸ்வரர் எப்போதும் தியானத்தில் இருப்பவர். சிவபெருமானுக்கு படைக்கப்படும் பொருள்கள், சண்டிகேசுவரரின் பெயரால் கணக்கு வைக்கப்படுகின்றன. "சிவன் சொத்து குலநாசம்" என்பர். அதனால், சிவாலயத்திலிருந்து எந்தவொரு பொருளையும் தாங்கள் வீட்டுக்கு எடுத்துச் செல்லவில்லை என்பதைத் தெரிவிக்கவே, இறுதியாக அவர் சந்நிதிக்கு வந்து இரு கைகளையும் தட்டிவிட்டு வணங்கும் வழக்கம் வந்ததாகக் கூறுவர். இவ்வாறு செய்தால் இவரது தியானம் கலைந்து விடும். அதனால் அவர் முன்பு கை தட்டி வணங்காமல் அமைதியாக வணங்குவதே சரியானது.
சண்டிகேஸ்வரரை வணங்கினால் மன உறுதியும், ஆன்மிக பலமும், சிவாலய தரிசன பலனும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.சிவசிவ.அன்பேசிவம்

No comments:
Post a Comment